

தமிழக இந்நாள் முதல்வர் தமிழ்த்தாயின் மூத்த மகன் கலைஞர் அவர்களுக்கு
நான் தமிழ்நாட்டின் குடிமகன் . என் உள்ளே எழும் கேள்விகளுக்கு உங்களால் பதில் தர முடிந்தால் பதில் அளிக்கவும் . ஏன் என்றால் எபோதும் நீங்கள் கேள்வி வாங்கி பின்பு யோசித்து பதில் அளிப்பது தானே உங்கள் வழக்கம் . அதனால் கேள்விகள் கேட்கிறேன் . பதில் கூறுங்கள் .
1 . எப்போதாவது நீங்கள் தனி ஆளாய் முதல் அமைச்சர் ஆனதுண்டா ?
எனக்கு தெரிந்து 1969 லில்
எம்ஜியார் தயவால் முதல் அமைச்சர் . மறுபடியும் 1971 லில் எம்ஜியார் தயவில் முதல் அமைச்சர் . பின்பு 1989 லில் மறுபடியும்
எம்ஜியார் இறந்த குழப்பத்தில் அதிமுக கட்சி பிரிந்ததால் மீண்டும் முதல் அமைச்சர் . 1996 லில்
ரஜினிகாந்த் தயவில் முதல் அமைச்சர். பின்பு இப்போது 2006 லில்
விஜயகாந்த் அதிமுக வாக்குகளை பிரித்ததால் முதல் அமைச்சர் . இதற்கு உங்கள் பதில் என்ன?
2 . காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும் என்று களம் கண்ட அண்ணாவின் வழி வந்த நீங்கள் ஏன் கடந்த ஆறு ஆண்டுகளாய் அவர்களுடன் கூட்டணி வைத்து உள்ளீர்கள் ?
3 . இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழர் தலைவன் என்று கூறி கொள்ளும் நீங்கள் காலையில் உண்ணாவிரதம் ஆரம்பித்து
மதியம் இலங்கையில் போரை நிறுத்தியது எப்படி?
பிறகு அங்கு போர் தொடர்ந்து நடை பெற்ற போதும், உங்கள் உறவுகள் என்று கூறி கொள்ளும் எம் தமிழன மக்கள் மடிந்து கொண்டிருக்கும் போது அது
சகோதர யுத்தம் என்று எப்படி உங்களால் கூற முடிந்தது ?
4 . நீங்கள் நினைத்து இருந்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த கோரி மத்திய அரசுக்கு தந்த ஆதரவை விலக்கி இருக்கலாம் . ஏன் அப்படி செய்ய வில்லை ? நேரில் சென்று பிரதமரை சந்து இருக்கலாம் . ஏன் செய்ய வில்லை ?
தந்தியும் தபாலும் அனுப்பி கொண்டு இருந்தீர்கள் . ஏன் மத்திய அரசுக்கு வருமானம் ஏற்படுத்தவா ?
5 . என் தமிழ் மக்கள் இலங்கையில் அழிக்கபட்டும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் , உங்கள் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பதவிகளை வாங்க மட்டும் டெல்லி போனீர்களே அது ஏன் ?
6 . கடந்த ஆண்டு அந்த பதவிகளை பெற உங்களை மீறி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இடைதரகர் மூலம் செயல் பட்ட ஆடியோ வெளியான பொழுது உங்கள் உழைப்பு வீணடிக்க பட்டதை உணர்ந்து வருத்தபட்டீர்களா ?
7 . உங்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்
ராசா கைது செய்யப்பட்டது உங்கள் ஒப்புதல் உடனா ? இல்லை உங்களுக்கு தெரியாமலா ?
8 . உங்கள் இரண்டாம் மனைவி தயாளு அம்மாள் மற்றும் உங்கள் துணைவி ராஜாத்தி அம்மாள் மகள் திருமதி கனிமொழி அரவிந்தன் மீது சி பி ஐ விசாரணை உங்கள் கட்சி அலுவலகத்தில் மேலே நடைபெற்ற போது கீழே காங்கிரஸ் கட்சியினர் உங்கள் கட்சி உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்திய போது உங்கள் மன நிலை என்ன ?
9 . ஆம்மாம் மறந்து விட்டேன் கனிமொழி யின் கணவர் இரண்டாவதா மூன்றவதா என் தெரியவில்லை அரவிந்தன் நலமாய் இருக்கிறரா ?
10 . உங்கள் மனச்சாட்சி யின் படி நீங்கள்
தமிழக மக்கள் நலனுக்கு எப்போதாவது பாடு பட்டு இருக்கீர்களா?
உங்கள் மக்கள் நலனுக்கு பாடு பட்டது உலகுக்கே தெரியும் நான் கேட்டது
தமிழ் மக்கள் ?
11 . உங்கள் மூத்த மகன்
மு.க . முத்து வை எம்ஜியார் கு எதிராக காலம் இறக்கி விட்டீர்கள் . அப்புறம் என்ன காரணம் கை விட்டு விட்டீர்கள் . இந்த தலை முறை பசங்களுக்கு அவர் யார் என்றே தெரியாத நிலை ஏன் இப்படி?
12 . முன்னாள் திமுக அமைச்சர்
தா.கிருட்டிணன், மதுரையில் வாக்கிங் போன நேரத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டிக் ெகால்லப்பட்டார். திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் உங்கள் மகன் மு.க.அழகிரி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.ஆனால் இந்த வழக்கில் கைதான அனைவரும் விடுதலையாகி விட்டனர் . அந்த நேரத்தில் கட்சி என்றால் அடிதடி நடக்க தான் செய்யும் என்று சொன்ன நீங்கள் அவரை கொன்றவர்கள் யார் என்று இப்பொழுது வரை கண்டு பிடிக்க சொல்லவில்லையே ஏன் ?
13 .இலங்கை தமிழர் பிரச்சனையின் போது கூட காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பதவி விலக மறுத்த உங்கள் கட்சி எம்பிகள் மந்திரிகள் , இப்போது 60 சீட் பத்தாது 63 சீட் வேணும் என்ற போது ராஜினமா நாடகம் நடத்தியது ஏன் ? தன்மானம் சுயம் என்று எல்லாம் பேசிவிட்டு மறு நாளே
63 ஒத்து கொண்டது ஏன் ?
இன்னும் என் மனதில் பல கேள்விகள் உள்ளன .
முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் .
பின்பு இன்னும் பல கேள்விகள் கேட்கிறேன் .
கேள்விகள் தொடரும் ..................