

சிங்கள கடற்படையின்னால் பிடித்து சிறையில் அடைக்கபட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி இலங்கை தூதரகம் முன்பு இன்று தமிழின காவலர் கலைஞர் கருணாநிதி அவர்களின் துணைவியின் புதல்வி கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அதில் கனிமொழி உட்பட ஆயிரகணக்கில் தி மு க வினர் கைது ஆகினர் .
என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே எனக்கு புரியலங்க "
இத்தனை நாள் ஆட்சில இவங்க எங்க இருந்தாங்கனு தெரியல , இப்ப புதுசா ஏதோ நடத்துறாங்க .
அங்க இலங்கைல லட்ச கணக்குல என் தமிழ் இனத்தை கொல்லும் போது இங்க இவர் உக்காந்துட்டு என்ன தண்ணில தூக்கி போடுங்க , என் மேல பயணம் பண்ணலாமுன்னு கவிதை படிச்சுட்டு இருந்தார் . இப்ப என்ன வந்துச்சு ஏன் , என்ன நடந்தாலும் இவர் ஆட்சிக்கு ஆபத்து வந்துட கூடாதுன்னு அமைதியா இருந்துட்டு இப்ப ஆர்பாட்டம் நடத்தி என்ன பண்றது,ஏதாவது மாய் மாலம் பண்ணி மறுபடியும் தமிழ் நாட்டுக்கு ராஜா வா இருக்கலாம்னு நினைக்கிறார்.
நான் சொல்லுறேன் என்ன முக்குனாலும் நடக்காது இந்த தடவை.
வாழு வாழ விடு , இதுக்கு அர்த்தம் தெரியுமா இவங்களுக்கு . இந்த கொடுமை எல்லாம் பாத்துட்டு இந்த உலகத்துல வாழ வேண்டி இருக்கு
இதை எல்லாம் பாக்குறப்ப எங்க அப்பா சொன்னது எனக்கு ஞாபகம் வருது.
பூனை கண்ணை மூடிகிச்சுணா இந்த உலகமே இருட்டுன்னு நினைக்குமாம்.
அரசியல்ல இதெல்லாம் சகஐமப்பா...
ReplyDeleteஉண்மைதான் நண்பரே , ஆனால் அந்த அரசியல்வாதிகளை உருவாக்குவதே நாம்தான்
ReplyDelete